விவாதிக்க தயாரா? - தங்கபாலுவுக்கு கள் இயக்கம் சவால்!
ஈரோடு: கள் இறக்கும் போராட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று தமிழ் நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு தமிழ் நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கள் இறக்கும் போராட்டத்தை எதிர்த்து சென்னையில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதம் வேதனைக்குரியது.
பனை-தென்னை தொழிலாளர்கள் மீதும், விவசாயிகள் மீதும், கிராமங்கள் மீதும் தமிழக காங்கிரஸ் கொண்டுள்ள விரோதப் போக்கை காட்டுகிறது.
மது வகைகளை தயாரிக்கும் செல்வந்தர்கள், முக்கியஸ்தர்களை கவனிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் அவர்களை கவனிப்பதில்லை என்பதால் மதுவுக்கு அனுமதியும் கள்ளுக்கு தடையும் விதிக்கப்படுகிறது.
ஆந்திரம், புதுச்சேரி உள்பட காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை.
அப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தடை விதிக்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டது வருத்தம் அளிக்கின்றது.
கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோருவது நியாயமில்லை என்று தாங்கள் நிரூபித்தால், எங்களது கோரிக்கையை கைவிட தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக தாங்கள் அறிவிக்கும் நாளில் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications