விமான சேவையை பயன்படுத்த என்எஸ்ஜிக்கு மத்திய அரசு சலுகை
டெல்லி: அவசர காலங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் (என்.எஸ்.ஜி) தங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களில் உள்ள விமானங்களை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பு படையினர் டெல்லியிலிருந்து, வர காலதாமதமானது. அதே போல் கடந்த 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் போது, தேசிய பாதுகாப்பு படையினர் அங்கு வந்து சேருவதற்குள் விமானம் அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டது.
விமானம் கிடைக்காமல் திண்டாடியதே இதற்கு முக்கிய காரணம். இது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்கு சொந்தமாக விமானம் இல்லாத அவலத்தை மீடியாக்கள் கிழி கிழியென்று கிழித்தன.
இதையடுத்து மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, இனிமேல் இது போன்ற சிக்கல்கள் எழாமல் தடுக்க அருகில் இருக்கும் இடங்களிலிருந்து உடனடியாக விமானங்களை பெற்று கொள்ள என்.எஸ்.ஜிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் மகேந்திர குமாவத் கூறுகையில், இனி மேல் தேசிய பாதுகாப்பு படையினர் தாமதாக வரும் வாய்ப்பில்லை.
மும்பை தாக்குதலின் போது அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்கும், மும்பை விமான நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு செல்வதற்கு தான் தாமதமானது என்றார் குமாவத்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications