இட ஒதுக்கீடு: சட்ட எரிப்பு போராட்டம் - ஆனைமுத்து உள்பட 200 பேர் கைது!

மத்திய உயர்கல்வியில் இருக்கின்ற மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவது கூடாது என்பதும் அதற்கு பதிலாகப் புதிதாக இடங்களை உண்டாக்கி அதன்பிறகு வரும் மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளில் தவணை முறையில், 27% இடங்களைத் தருவதே என்பதுவே இச் சட்டத்தின் நோக்கமாகும்.
இது பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு உரிமைகளை தர மறுத்துவிட்டு வெறும் 15% மக்களை கொண்ட மேல் சாதியினருக்கு 75%க்கு மேற்பட்ட இடங்களை ஒதுக்கித்தருவதற்கு உத்தரவாதம் அளிப்பதாகும்.
இது மாபெரும் அநீதி ஆகும். பொறுத்துக்கொள்ள முடியாத கொடுமையாகும் என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலர் வே. ஆனைமுத்து தலைமையில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ஆனைமுத்து உள்ளிட்ட 200 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். சங்கமித்ரா மற்றும் மாநிலத்தின் பல பகுதியில் இருந்து வந்துள்ளோர் கைதாயினர்.


Click it and Unblock the Notifications
