ஐ.சி.யூவிலிருந்து பிரதமர் மாற்றம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டார் பிரதமர்

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் பிரதமரை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறு வார்டுக்கு டாக்டர்கள் மாற்றினர்.
இருப்பினும் சனிக்கிழமைக்கு முன்னதாக பிரதமர் டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார் எனத் தெரிகிறது.
நேற்று தனது அறைக்குள் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டார் பிரதமர். வழக்கமான உணவையும் அவர் உட்கொண்டார்.
அவருக்கு பிசியோதெரபியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, காலிப் வகை இசையை கேட்பதில் அதிக நேரம் செலவழித்து வருகிறார் பிரதமர் என அவரது மகள் தாமன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் நன்றாக ஓய்வெடுத்து வருகிறார். அதிக நேரம் இசையை ரசித்து கேட்கிறார். அவருக்கு நேற்று இரவு யாரோ ஒருவர் காலிப் இசை பாடல் தொகுப்பை கொடுத்துள்ளனர். அப்போதிலிருந்து அதை தொடர்ந்து விரும்பி கேட்டு வருகிறார்.
விரைவில் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார். டாக்டர்கள் அவரது உடல்நிலை நன்கு தேறிவருவதாக தெரிவித்துள்ளனர். அது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.
எனது தாயார் அவருக்கு துணையாக உடன் இருக்கிறார். நாங்கள் மூன்று சகோதரிகள் இருப்பதால் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவரை பார்த்து கொள்கிறோம். இன்று அவருடன் சேர்ந்து சாப்பிடலாம் என இருக்கிறேன்.
ஆபரேஷன் முடிந்த நிலையில் பலரும் வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்தது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications