அரசு டாக்டர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கவுன்சிலிங்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக அரசு டாக்டர்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாராத நிலையங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு கடந்த 2 வருடங்களாக பணி மாறுதல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு டாக்டர்கள் சங்க மாநிலச் செயலாளர் செந்தில் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அரசு மருத்துவமனைகளில் கவுன்சில்கள் முறையாக நடத்தப்படாமல் மாறுதல் விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது.

உரிய காரணம் இருந்தும் பல டாக்டர்களுக்கு மாறுதல் வழங்குவதில் கால தாமதம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் பலர் மேல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் அந்த இடங்கள் காலியாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதையடுத்து வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கவுன்சலிங் நடைபெறும் என்று அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என்றார் செந்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+