பிரணாபின் கொழும்பு பயணம்: சட்டசபையில் சூடான வாதம்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் பாமக உறுப்பினர் வேல்முருகன் எழுந்து, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று இதே அவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அங்கு நடத்தப்படும் கோரப்படுகொலைகள் நிறுத்தப்படவில்லை.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார். போரை தடுத்து நிறுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
அதற்கு நிதியமைச்சர் அன்பழகன், பிரச்னையை குறிப்பாக சொல்லுங்கள். எங்களால் முடிந்த பதிலை சொல்கிறோம் என்றார்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், குறுக்கிட்டுப் பேசினார். ஆனால் இடை மறித்த அன்பழகன், நீங்கள் பிரச்னையை மட்டும் பேசுங்கள். அதை விவாதமாக எடுத்துச் சென்றால் அரசு எப்படி பதில் சொல்ல முடியும்? என்றார்.
இதையடுத்து தொடர்ந்து சிவபுண்ணியம் பேசினார். அவரது கருத்துக்களுக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சிவபுண்ணியம் பேசிய அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ஒரு பிரச்னை குறித்து பதில் அறிய அனுமதிக்கலாம். இந்த நேரத்தில் தங்களுடைய உணர்ச்சியை காட்டுவதோ, மத்திய அரசை தாக்குவதோ கூடாது.
அந்த சமயத்தில், ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக) இருவரும் பேச முயன்றனர். அவர்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
நிதியமைச்சர் அன்பழகன்: ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும், அதற்காக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று இதே அவையில் 4 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார். அவர் இலங்கை செல்வதற்கு முன் முதல்வருடன் பேசினார். அங்கு சென்று வந்த பின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பல பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. ஒரு பத்திரிகையில் தமிழர்கள் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் என்ற தலைப்பில் வந்துள்ளது.
பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களை ஆதரிப்போம் என்று குரல் கொடுப்பவர்களும் உண்டு. இதில் மையமான கருத்து தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான்.
பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று திரும்பிய பின் வெளியிட்ட அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளது. அதை தமிழாக்கம் செய்யும்போது கருத்துக்கள் மாறுபடும். எனவே, அவருடைய ஆங்கில அறிக்கையை படிக்கிறேன்.
இந்த அறிக்கையில், தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் வாழும் பகுதியில் வெடிகுண்டு வீசக்கூடாது. அவர்கள் வாழும் பகுதியில் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாம் அரசியல்வாதிகள் என்ற நிலையை கடந்து, ஆளும் ஆட்சியாளர்கள் என்ற நிலையை கடந்து அயல்நாட்டு பிரச்னைகளை அளவோடுதான் விவாதிக்க முடியும். உரிய முறையில் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது பிரணாப் அறிக்கையிலிருந்து தெளிவாக தெரிகிறது. இதைத்தான் இந்த அவையில் அரசு தெரிவிக்க விரும்புகிறது என்றார்.
அப்போது சிவபுண்ணியம் குறுக்கிட்டு பேச முற்பட்டார். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications