இங்குள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம் - அதை மாய்க்க வேண்டாம்: ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: இலங்கைத் தமிழர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம். எனவே யாரும் உயிரை மாய்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பெண்ணே நீ இதழின் ஊழியரான முத்துக்குமார் என்ற இளைஞர் இன்று காலை சாஸ்திரி பவன் வளாகத்தில் இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகைய முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.
சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர்.
எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதயத்தை சுட்டெரிக்கிறது - வைகோ
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்துக்குமார் என்னும் வீரத் தமிழ் இளைஞன், ஈழத் தமிழர்களின் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், தன்னையே நெருப்புக்கு தாரை வார்த்தான் எனும் செய்தி நம் இதயத்தை சுட்டு எரிக்கிறது.
முத்துக்குமாரை இழந்து துன்பத்தில் துடிதுடிக்கும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.
ஈழத்தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கி விட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்.
சிங்கள அரசு நடத்தும் இனக்கொலை போரை தடுக்க முன்வரட்டும். செய்துவரும் துரோகத்தை இனியாவது நிறுத்தட்டும். தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்து கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications