இலங்கைத் தாக்குதல் தொடருகிறது - மேலும் 44 பேர் பரிதாப சாவு

பாதுகாப்பு வளையம் என இலங்கை அரசு அறிவித்த பகுதிகளுக்குப் போனால் உயிர் பிழைக்கலாம் என்று நம்பி அங்கு வரும் அப்பாவித் தமிழர்களை பீரங்கிகளைக் கொண்டு இலங்கைப் படைகள் மனிதாபிமானமே இல்லாமல் கொன்று குவித்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைப் படைகள் ஈவு இரக்கமின்றி பீரங்கித் தாக்குதல் மூலம் கொன்று குவித்தன.
இந்த நிலையில், உடையார்கட்டு, மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இலங்கைப் படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
இதில், 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 178 பேர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டனர். சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டனர். தெருவோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
18 பேரின் உடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் கிடந்தது.












Click it and Unblock the Notifications