இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இனப்படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு மெளனமாக இருப்பதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நேற்று சட்டப் பேரவைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது திடீரென பெண்கள் அனைவரும் சட்டசபை வளாகத்திற்குள் புக முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வக்கீல்கள் காலவரையற்ற ஸ்டிரைக் ..
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இனப்படுகொலை நிற்க வேண்டும். இந்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபியில் கடையடைப்பு ..
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் வணிகர்கள் நேற்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக கோபி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பல பகுதிகளில் மாணவர்கள் உண்ணாவிரதம் ...
அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று 3வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடருகிறார்கள்.
கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கோவையில் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications