சென்னையில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார்.
தேனாம்பேட்டை திருவிக குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆதவன். 30 வயதாகும் இவர் அப்பகுதியில் ரவுடியாக இருந்தார்.
இவருக்கும், குட்டியம்மாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு வழக்கில் சிறை சென்று திரும்பியிருந்தார் ஆதவன். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே ஆதவன் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் அடங்கிய ஒரு கும்பல் அங்கு வந்தது. ஆதவனை மறித்து சரமாரியாக வெட்டித் தள்ளினர். அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்றார் ஆதவன்.
ஆனால் அவரை விரட்டிச் சென்ற அக்கும்பல் வெட்டித் தள்ளிக் கீழே சாய்த்து விட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஆதவன் உயிரிழந்தார்.
பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications