பஸ்தரன்-இ-பாகிஸ்தான் - முஷாரப் ஆரம்பிக்கும் புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்: கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி புரிந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளார். இம்முறை ஜனநாயக அரசியலில் களமிறங்க ஆர்வமாக இருக்கிறார். இதற்காக அவர் பஸ்தரன்-இ-பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறார்.
பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை கைப்பற்றியவர் முஷாரப். 8 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடத்தினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் நடந்த பொது தேர்தலில் அவரது ஆதரவு கட்சியான முஸ்லிம் லீக் (குரேஷி) படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து பதவி விலகாவிட்டால் அவரை பதவி நீக்கம் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவரை பதவி ஆசை மீண்டும் தொற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அவர் புதிய அரசியல் கட்சி துவக்க இருக்கிறார். அவர் முஸ்லிம் லீக் (குரேஷி) கட்சியை புதுப்பிக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு இருந்தாராம். ஆனால் அதற்கு அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் நீங்களே ஏன் புதிய கட்சி துவங்கக்கூடாது என முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முகமது அலி துரானி தான் அவருக்கு இந்த புதிய பாதையை காட்டினாராம். இதையடுத்து புதுக்கட்சி தொடங்க தீர்மானிதத முஷாரப், தனது கட்சிக்கு பஸ்தரன்-இ-பாகிஸ்தான் என பெயர் சூட்டவிருக்கிறார்.
மக்கள் மனதில் இடம்பிடித்து, ஓட்டு வங்கியை உருவாக்குவது எப்படி எனவும் முஷாரப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications