ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகம் முன்பு தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 9 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மேலும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும், வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணா விரதம் இருந்து வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் திரளான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
மேலும் தங்களது போராட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் சுவிஸ் மக்களிடையே விநியோகித்து வருகின்றனர்.
இன்று மாலையில் தங்களது கோரிக்கை மனுவை ஐ.நா. அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளனர்.
"உண்ணாமல் இருந்து உறவைக் காப்போம்" என்கின்ற தலைப்பில், பிப்ரவரி 4ம் தேதி ஜூரிச்சில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications