புதுக்குடியிருப்பு: புலிகள் தாக்குதலில் படையினர் பலர் பலி! 2 டாங்கிகள் அழிப்பு!!
வன்னி: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் இன்று பதிலடி தாக்குதல்களை நடத்தி மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுமுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள செய்தி:
புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு இலங்கையின் 59 ஆவது டிவிசன் படையினர் பெரும் ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.
இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்களில் படையினருக்கு மிகப் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படையினரின் இரண்டு டாங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் பெருமளவிலானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலியானோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கு முழுவதுமாக இன்னும் சிறிது நேரத்தில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications