கச்சா எண்ணையை மக்கள் அள்ளியபோது தீவிபத்து - 111 பேர் பலி
மோலோ (கென்யா): கென்யாவின் மோலோ நகரில் டேங்கர் லாரியிலிருந்து சாலையில் சிந்திய கச்சா எண்ணையை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளியபோது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 111 பேர் உடல் கருகி பலியாயினர்.
சமீப காலத்தில் கென்யாவில் நடந்த மிக மோசமான தீவிபத்தாக இது கருதப்படுகிறது.
மோலோ நகரின் மத்திய ரிப்ட் வேலி பகுதியில், ஒரு டேங்கர் லாரி கச்சா எண்ணையுடன் போய்க் கொண்டிருந்தது. அப்போது லாரி விபத்துக்குள்ளாகி நின்று விட்டது.
அதிலிருந்து கச்சா எண்ணை கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பல்வேறு பாத்திரங்கள், டிரம்கள், வாளிகள் உளளிட்டவற்றில் எண்ணையை அள்ளத் தொடங்கினர்.
ஆனால் கச்சா எண்ணையை அள்ளாதீர்கள், தீவிபத்து ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளதாக காவல்துறை எச்சரித்தனர். ஆனால் அதை மக்கள் கேட்பதாக இல்லை.
இந்த நிலையில் தீப்பிடித்துக் கொண்டது. படு வேகமாக பரவிய தீயில் சிக்கி 91 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
பல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன.
எண்ணையை அள்ளிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் சிகரெட் பற்ற வைத்து தீக்குச்சியைக் கீழே போட்டதால்தான் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications