சாயல்குடியில் குடிநீர் பஞ்சம் - குடம் ரூ.4க்கு விற்பனை
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 4க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சாயல்குடி பகுதியில் சமீபத்தில் நல்ல மழை பெய்தும் கூட எந்த கண்மாயும் நிரம்பவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டமும் உயரவில்லை.
இந்நிலையில் சாயல்குடி டவுனில் குடிநீர் ஊரணியோ, பேரூராட்சி கட்டுப்பாட்டில் போர் வசதியோ செய்து தரவில்லை.
ராஜகம்பீரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீரும் சாயல்குடி நகர் பகுதிக்கு சரிவர வருவதில்லை. நரிப்பையூரின் உப்பு நீரை நண்ணீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரையும் பொதுமக்கள் குடிநீராக பருகுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சாயல்குடி டவுனில் குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது.
இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் எடுத்துவரப்பட்ட குடிநீர் ரூ.4க்கு ஒரு குடம் என்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் என்பது சாயல்குடி டவுன் பகுதியில் பெரும் அவஸ்தையை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம்தான் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்குமா என சாயல்குடி டவுன் மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications