விட்டதைப் பிடித்த சென்செக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று கடும் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ், இன்று செவ்வாய்க்கிழமை சுதாரித்துக் கொண்டது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்திலேயே 62 புள்ளிகள் கூடுதலாகத் துவங்கியது சென்செக்ஸ். நிப்டியிலும் 23 புள்ளிகள் உயர்வு தெரிந்தது.

இந்த சாதகமான நிலை வர்த்தகம் முடிவுறும் நேரம் வரையிலும் தொடர்ந்தது. அமெரிக்காவில் ஒபாமா அரசு அறிவித்துள்ள பெருமளவு பொருளாதாரச் சலுகைகளின் விளைவாகவே ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவி வருவதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் இன்று நல்ல ஏற்றம் கண்டன.

வர்த்தக நேரம் முறுவுறும் தறுவாயில் சென்செக்ஸ் 201 புள்ளிகள் உயர்ந்து 9268.05 புள்ளிகளாகவும், நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 2821.90 புள்ளிகளாகவும் இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் நஷ்டத்தைச் சந்தித்த பங்குகளில் முக்கியமானது சத்யம். 3.2 சதவிகிதம் குறைவான விலையில் கைமாறின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+