சிவப்பில் முடிந்த பங்குச் சந்தை!
மும்பை: இரண்டு நாள் ஜோரான வர்த்தகத்துக்குப் பின் நாட்டின் பங்கு வர்த்தகம் இன்று சுணக்கமாகக் காணப்பட்டது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் 111 புள்ளிகள் குறைந்து மைனஸில் நிலைகொண்டது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 23 புள்ளிகள் குறைவாக இருந்தது.
குறிப்பாக சென்செக்ஸில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் இன்று நஷ்டத்திலேயே கைமாறியது.
இத்தனைக்கும் இந்த வாரம் பணவீக்கம் கணிசமாகக் குறைந்திருந்த போதிலும், அது பங்குச் சந்தையில் சாதகமான பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டு வரவில்லை.
இந்தியாவில் வரும் நாட்களில் 1 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படுவதாக நேற்று இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பு அறிவித்திருப்பது இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 9,090.88 (-110.97), நிப்டி: 2,780.05 (-23)












Click it and Unblock the Notifications