ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு; அம்பையில் 48 வக்கீல்கள் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
அம்பை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து அம்பை வக்கீல்கள் சங்கம் மற்றும் பார் அசோஷியன் சார்பில் நேற்று முன்தினம் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அம்பை பார் அசோஷுயன் மற்றும் வக்கீல்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வக்கீல்கள் காரில் மறைத்து வைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எடுத்து தீடீரென எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வக்கீல்கள் சங்க தலைவர், செயலாளர், உள்பட 48 வக்கீல்கள் மீது அம்பை இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் பிரிவு 143 மற்றும் 285-ன் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications