இனப்படுகொலை: சர்வதேச கோர்ட்டில் இலங்கை மீது வழக்கு - தா.பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

Pandian
மதுரை: இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் கூறுகையில்,

இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடுவதோடு அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் இலங்கைப் பிரச்சினை குறித்து மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் அங்கு வழக்கு தொடரப்படும்.

இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை.

ஆனால், இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார்.

இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+