உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: 43 பேர் பலி
இதில் நேற்று மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 155 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது வியாழக்கிழமை இலங்கை படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துக் கிடங்கும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளதனால் வன்னியில் உள்ள மக்களுக்கு தற்போது சேவையாற்றி வருவது உடையார்கட்டு மருத்துவமனை மட்டுமே.
இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக கொடூர எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நேற்று முழுவதும் ராணுவத்தினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் 10 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இருட்டுமடுப்பகுதியில் இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
வள்ளிபுனம் பகுதியில் இன்று இலங்கை படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய பல்குழல் வெடிகணைத் தாக்குதலில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை வன்னிப் பகுதியில் மட்டும் கொல்லப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1000-த் தொடுவதாகவும் காயம்பட்டோர் 4000-த் தாண்டுவதாகவும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவமனைகளும் எங்கள் இலக்குதான்!
இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கேட்டுக் கொண்டபிறகு, தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இலங்கை ராணுவம்.
மருத்துவமனைகளும் எங்கள் இலக்குகளில் உள்ளன என்று கோத்தபாய ராஜபக்சே ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
இதன் மூலம், மனிதப் பாதுகாப்பு வலயத்துக்கு வாருங்கள் என்று தமிழர்களை வேண்டுமேன்ற அழைத்து, குண்டுவீசிக் கூண்டோடு அழித்து வருகிறது இலங்கை அரசு என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications