கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீது தாக்குதல்
கொழும்பு: கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை நூற்றுக்கணக்கான சிங்களர்கள் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உடனடியாக செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
இலங்கையின் வட பகுதியில் அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பால் காஸ்டெல்லா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான சிங்களர்கள் திரண்டனர். அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர். இதில், அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
பின்னர் போலீஸார் விரைந்து வந்தனர். இதையடுத்து கும்பல் கலைந்து சென்றது.
முல்லைத்தீவில் நடந்து வரும் சண்டையில், இலங்கைப் படைகள் செய்து வரும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திரட்டி வருவதாக நேற்று காலை தேசிய சுதந்திர முன்னணிக் கூட்டணியின் தலைவரான விமல் வீரவன்சா கூறியிருந்தார்.
அவர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications