திருச்செந்தூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ்; 10 நிமிடத்தில் டிக்கெட் காலி
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் டிக்கெட் விற்பனை துவங்கிய 10 நிமிடத்திலே விற்று தீர்ந்தது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் தொடக்கவிழா நாளை மதியம் 1 மணிக்கு திருச்செந்தூரில் நடக்கிறது. இதில் ரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா மற்றும் உயரதிகாரிகள் கலந்து
கொள்கின்றனர்.
இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஓன்றும், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6ம், முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4ம், கார்டு பெட்டி 2ம்மாக 14 பெட்டிகள் உள்ளன.
இதற்கான முன்பதிவு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்தன. மேலும் ஒரு மணி நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது.
இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி திருச்செந்தூர் ரயில் நிலையம் வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தொடக்கி வைக்கிறார்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை தோறும் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்கிறது. அதேபோல் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைதோறும் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வருகிறது.
ஆறுமுகநேரி, காயல்பட்டிணம் ரயில் நிலையஙகளில் முன்பதிவு டிக்கெட் கோட்டா 6ல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆறுமுகநேரி, காயல்பட்டிணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நேற்று காலை முதல் முன்பதிவு தொடங்கியது என்றார் ராதிகா செல்வி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications