சாலை விபத்துகளால் ரூ. 55,000 கோடி நஷ்டம்
நெல்லை: சாலை விபத்தில் நிகழும் மரணங்களால் ஒரு ஆண்டுக்கு ரூ.55 கோடி ரூபாய் சமுகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நெல்லையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் டிஆர் பாலு வேதனை தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த விழாவில் நெல்லை-நாங்குநேரி, காயத்தாறு-தாழையூத்து வரையிலான 44 கிமீ தூரமுள்ள நான்கு வழிசாலையை திறந்து வைத்து மத்திய அமைச்சர் டிஆர் பாலு
பேசியதாவது, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுளளதன் மூலம் இந்த சாலையில் இரண்டு சக்கர வாகனம் சென்றால் ஒரு கிமீ தூரத்திற்கு ரூ.6ம், கார்கள் சென்றால் ஒரு கிமீக்கு ரூ.2ம் மிச்சமாகிறது.
இதன் மூலம் 1 ஆண்டிற்கு 1 கிமீ தூரத்திற்கு ரூ.2 கோடி மிச்சமாகிறது. சாலைகளை போடும அதே நேரத்தில் விபத்துகளும் அதிகம் ஏற்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்து
60 ஆயிரம் வி்பத்துகள் நடந்துள்ளன. இதில் மரணம் அடைந்தவர்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 759 பேர். 5 லட்சம் பேர் கை, கால்களை இழந்து படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து, 5 நிமிடத்திற்கு ஒருவர் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்களை தவிர்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இத்தனை பேர் மரணம் அடைந்தால் சமூகத்திற்கு ரூ.55
ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒட்டு மொத்த உற்பத்தி 3 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட விபத்துகளால் 500 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 24 லட்சத்து 75
ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துகளுக்கு 74 சதவீத காரணம் டிரைவர்கள்தான்.
எனவே 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. இது குறித்து மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் டிஆர் பாலு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications