இலங்கை விமானப்படைத் தாக்குதல் - தப்பினார் சூசை
கொழும்பு: இலங்கை விமானப்படையினர் நடத்திய தாக்குதலிலிருந்து கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை தப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், இலங்கை விமானப்படையினர், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு சந்திப்புக்கு வட கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இருந்ததாக நம்பப்படும் மறைவிடத்தை குண்டு வீசித் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் மூத்த நிர்வாகிகள் என நம்புகிறோம். அவர்களது பாடிகார்டுகளும் கொல்லப்பட்டனர்.
அந்த மறைவிடம், கடற்புலிகள் பிரிவின் ஒருங்கிணைப்புத் தலைமையகம் என தற்போது தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடந்த சமயத்தில் கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை அங்கிருந்ததாக நம்புகிறோம். இதை புலிகளின் தகவல் தொடர்பை மறித்துக் கேட்டபோது உறுதி செய்தோம். இருப்பினும் அவர் காயமடைந்துள்ளாரா அல்லது தப்பி விட்டாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
தாக்குதல் நடந்த இடத்தில் விடுதலைப் புலிகள் புல்டோசர்களைக் கொண்டு தோண்டியதைப் பார்த்து மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், அந்த புல்டோசர்கள் சேதமடைந்தன. சில புலிகளும் உயிரிழந்துள்ளனர் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications