விமானத் தாக்குதலில் மருத்துவமனை அழிப்பு - 61 நோயாளிகள் பலி

புதுக்குடியிருப்பில் இருந்த மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையை இலங்கை விமானப்படையின், மிக் ரக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்கிய இலங்கை விமானப்படையினர் மருத்துவமனையை அடியோடு தகர்த்து விட்டனர்.
இதில் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின்போது சாலையில் சென்று கொண்டிருந்த 12 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கு தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நடந்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதேபோல, முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் சனிக்கிழமை, இலங்கைப் படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், இடம் பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் மக்களைக் குறி வைத்து நேற்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் எப்-7 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் நேற்று பிற்பகல் இதே பகுதியைக் குறி வைத்து இலங்கை படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.32 பேர் காயமடைந்தனர்.
மரங்களின் கீழ் அறுவைச் சிகிச்சை
மருத்துவமனைகள் மீது தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்துவதால், சாலையோரங்களில் மக்கள்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications