வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்ற அறிகுறிகள்
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலையில் முன்னேற்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் நல பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வாஜ்பாய். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எய்ம்ஸ் கண்காணிப்பாளர் டி.கே.சர்மா வெளியிட்ட அறிக்கையில், வாஜ்பாய் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
தற்போது அவரது உடல் நிலை ஸ்திரமாக உள்ளது. சிகிச்சைக்கு உடல் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. லேசான முன்னேற்ற அறிகுறிகளும் இன்று காலை தென்பட்டன.
அவரது நுரையீரலில் ஏற்பட்டிருந்த நோய்த் தொற்று தற்போது குறைந்து விட்டது. நிமோனியா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. நுரையீரலால் சுத்திகரிக்கப்பட்டு ரத்தத்திற்கு அனுப்படும் ஆக்சிஜனின் அளவு அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம். நிமோனியா பரவலும் நின்று விட்டது என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவருக்கு காய்ச்சலும், நெஞ்சு அடைப்பும் இருந்தது. பின்னர்தான் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு











Click it and Unblock the Notifications