சோனியாவின் அருள்நெஞ்சம்-எஸ்ஆர்பி புகழ்ச்சி
சென்னை: போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொது மக்களும், ஐ.நா. ஊழியர்கள் குடும்பத்தினரும் சென்றுவிட்டால் தங்களுடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று புலிகள் அச்சம் கொள்வதால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் கவலை அளிப்பதாக உள்ளது.
புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதான பேச்சுக்கு இடம் அளிக்கும் வகையில் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், போப்பாண்டவரின் தூதர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொது மக்களும், ஐ.நா. ஊழியர்கள் குடும்பத்தினரும் சென்றுவிட்டால் தங்களுடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று புலிகள் அச்சம் கொள்வதால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு புலிகளால் தடுத்து நிறுத்தப்படுவது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சி மீதும், மத்திய அரசு மீதும் அபாண்டமாக பழிசுமத்தி வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவரது அறிக்கை உண்மைக்கு மாறாக திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் சோனியா செயல்படுகிறார் என்று கூறும் நிலைக்கும் சிலர் சென்றிருக்கிறார்கள். ராஜீவ் படுகொலையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட நளினிக்கு உயிர் பிச்சை அளித்த அருள்நெஞ்சம் கொண்ட சோனியாவின் இரக்க சிந்தனையை கூட இவர்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை.
எப்படியாவது விடுதலைப் புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஆத்திரம்தான் இவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கும், நெடுமாறன், வைகோ போன்றோருக்குமிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவை பயன்படுத்தி போர் பகுதியில் சிக்கி கொண்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற புலிகளை அவர்கள் கேட்டு கொள்ள வேண்டும். அதன் மூலமாக அப்பாவி தமிழர்களை உயிரோடு மீட்க முடியும்.
மேலும் ஆயுதங்களை துறந்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்த இந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் வலியுறுத்த வேண்டும் என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications