அறக்கட்டளைக்கு நிலம்-சிக்கலில் சாவ்லா

நவீன் சாவ்லா தலைவராகவும், அவரது மனைவி ரூபிகா செயலாளராகவும் உள்ள இரு அறக்கட்டளைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஜெய்ப்பூர் கோர்ட் ஒன்று உத்தரவிட்டுள்ளதால், நவீன் சாவ்லாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பாஜக தொண்டர் இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2000மாவது ஆண்டு நவீன் சாவ்லாவைத் தலைவராகவும், அவரது மனைவிய செயலாளராகவும் கொண்ட இந்த இரு அறக்கட்டளைகளுக்கும், ஜெய்ப்பூர் நகரில் நிலம் ஒதுக்கப்பட்டது.
முறைப்படி பதிவு செய்வதற்கு முன்பாகவே 25,000 சதுர மீட்டர் நிலத்தை இரு அறக்கட்டளைகளுக்கும், ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையம் ஒதுக்கி விட்டது. இது சட்டவிரோதமாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நவீன் சாவ்லாவும், அவரது மனைவியும் நெருக்கமானவர்கள் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அசோக் கெலாட் அரசு அவசரம் அவசரமாக நில ஒதுக்கீட்டை சாவ்லாவுக்காக செய்து முடித்தது.
மேலும் அடிமாட்டு விலைக்கு இந்த நிலத்தை இரு அறக்கட்டளைகளுக்கும் ராஜஸ்தான் அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலத்தை தனது அறக்கட்டளைகளுக்கு ஒதுக்குவதில் வேகம் காட்டாறுமாறு தனது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மூலம் இரு கடிதங்களை, ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையத்திற்கு இரு கடிதங்களை எழுதியுள்ளார் சாவ்லா.
எனவே இந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இப்புகார் குறித்து விரிவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இப்போதும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது, அசோக் கெலாட்தான் முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications