பான் கி மூனுக்கு கோடிக்கணக்கில் தந்திகள்: பழ.நெடுமாறன்
சென்னை: இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த கோரி, ஐ.நா. பொது செயலாளருக்கு தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்ப வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,
எங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகின்ற 17-ந் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. 19-ந் தேதி கோவையிலும், 24-ந் தேதி மதுரையிலும் பேரணி நடைபெறும். புதுவை, சேலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் பேரணி நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும்.
தூதர்களை சந்தி்ப்போம் ..
அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த உள்ளோம்.
ஐ.நா. பொது செயலாளருக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்ப வேண்டும்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் மரண சாசனம் லட்சக்கணக்கில் அச்சடித்தும், சி.டி.யாக தயாரித்தும் மக்களிடம் வழங்க உள்ளோம் என்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
நேற்று ஒரு செய்தியை பத்திரிகைக்கு கொடுத்தேன். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி எந்த குற்றமும் சொல்லவில்லை. அதற்கு 8 பக்கம் மறுபடியும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவர் பூரண குணம் பெற நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் 4-வது விவாத பொருளாக இலங்கை பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஐயா, உங்கள் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அப்படியொரு நிலை வந்தால், எங்கள் 18 எம்.எல்.ஏக்களையும் உங்களிடம் நேரே காட்டி ஓட்டுபோடச் சொல்கிறேன். உங்கள் எடுபிடிகளை வைத்து அறிக்கை வெளியிட வேண்டாம், மனம் இருந்தால் உங்கள் தொண்டர்களையும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனுப்பி வையுங்கள் என்றார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில்,
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது கப்பல், கப்பலாக ஆயுதங்கள் இறக்குமதி செய்தது இலங்கை அரசு. ஆனால் இங்கிருந்து என் சகோதரர்களுக்கு 10 லிட்டர் டீசல் போய் விட்டால் கடத்தல் என்கிறார்கள். இனிவரும் இளைஞர்கள் எங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
ஆயுதம் ஏந்துவேன் ...
இனிவரும் இந்நாட்டு இளைஞர்கள் கடல்வழியாக ஆயுதங்களோடு புறப்படுவார்கள். அப்படி ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை வந்தால் நான் முதல் ஆளாக நிற்பேன். உன் பாதுகாப்பு சட்டம் கால் தூசிக்கு சமம்.
மாணவர்களே வீதிக்கு வாருங்கள், கிளர்ச்சி பரவட்டும், தமிழகம் கொந்தளிக்கட்டும். இந்திய ஒருமைப்பாடு சிதறிவிடும் என்ற பயம் இந்திய அரசுக்கு வரட்டும். என்னுடைய இந்த நிலைப்பாட்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றார்.
கருணாநிதி கையில் ஆயுதம் ...
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,
முதல்-அமைச்சர் கருணாநிதி, நாங்கள் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக சொல்கிறார். ஆறரை கோடி தமிழ் மக்கள் உரிமையை மதிக்காத மத்திய அரசை மக்கள் கண்டிக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளின் தலைவரான நீங்கள் கண்டிக்க வேண்டும். அதற்கான ஆயுதம் அவரிடம் இருக்கிறது. பயன்படுத்த மறுக்கிறார் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறிய இந்திய அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளி கூண்டில் இந்திய அரசை நிறுத்த வேண்டிய தேவை இப்போது உள்ளது. இந்திய அரசு செய்த குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம்.
இலங்கை அரசின் இறையாண்மைக்குள் தலையிட்டது முதல் குற்றம்.
அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்தால் தான் இந்திய அரசு போரை நிறுத்த சொல்லும். இலங்கையில் நடைபெறும் போரில் பிரபாகரன் களத்தில் மோதி சாவாரே தவிர, மண்டியிட்டு சாகமாட்டார். உலக வரலாற்றில் பிரபாகரனுக்கு இணையாக புரட்சி தலைவர்கள் தோன்றவில்லை என்றார்.
சீமான் பங்கேற்றார் ...
கூட்டத்தில், பா.ஜ.க. பொது செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக எம்.பி. ஏ.கே.மூர்த்தி, இயக்குனர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான், வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications