அபுதாபியில் தமிழக அதிகாரி மரணம்
அபுதாபி: அபுதாபியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி செல்வராஜ் மரணமடைந்தார்.
அபுதாபி கிரானைட் கட்டுமான நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் பார்த்தசாரதி செல்வராஜ் (67). இவர் 8ம் தேதி இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து இந்நிறுவன வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தவர் செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சொந்த ஊர் தர்மபுரி. தர்மபுரி அருகே அனாதை இல்லம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர்ம காரியங்கள் செய்து வந்துள்ளார்.
இவரின் முயற்சியால், தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
இவரது மறைவினையடுத்து குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications