நாடாளுமன்றம் கூடியது-நாளை இடைக்கால ரயில்வே பட்ஜெட்
டெல்லி: நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் நாளை இடைக்கால ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
மே மாதத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
தீவிரவாதம், மும்பை தாக்குதல், இலங்கை விவகாரம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலையிழப்புகள், தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடையிலான மோதல் (தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையும், ஆணையர் நவீன் சாவ்லா மீது காங்கிரஸ் ஆதரவாளர் என்ற முத்திரையும் உள்ளது குறிப்பிடத்தக்கது), மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற பாஜகவின் அறிவிப்பு ஆகியவை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும்.
இடதுசாரிகளின் எதிர்ப்பால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் மசோதா உள்பட பல மசோதாக்களை மத்திய அரசு இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது.
மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு மீண்டும் அரசு அமைப்பது தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்தி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் ஆண்டுக்காண்டு கட்டணத்தைக் குறைத்து வரும் லாலு, தேர்தலும் வருவதால் அதிரடியாக கட்டணங்களை மேலும் ஒரேயடியாகக் குறைப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் பாஜக தலைமையிலான கட்சிகள் 'லாலு கலக்கத்தில்' உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications