பங்குச் சந்தையில் இன்று லாலு எஃபெக்ட்!
மும்பை: லாலுவின் புண்ணியத்தில் இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் அமோகமாக இருந்தது.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து வகுப்புளுக்கும் கட்டணக் குறைப்பு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால், பங்குச் சந்தையில் பிற்பகலுக்குப் பின் வர்த்தகம் சூடுபிடித்தது.
சென்செக்ஸில் 168 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 55 புள்ளிகள் உயர்ந்தன.
மிட்கேப் மற்றுமம் ஸ்மால் கேப் பங்குகளிலும் இன்று நல்ல உயர்வு காணப்பட்டது. குறிப்பாக சிறிய பங்குகளில் அன்றாட வர்த்தக அடிப்படையில் முதலீடு செய்வது இன்று பெருமளவு காணப்பட்டது.
டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பிஎச்இஎல், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஏசிசி, ஜெய்பிரகாஷ் அஸேஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபம் பார்த்தன.
பார்தி ஏர்டெல், ரான்பாக்ஸி, ஐடிசி சரிவைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 9634.74 (+168.91), நிப்டி 2948 (+55.30) ஆக இருந்தன.


Click it and Unblock the Notifications
