ஐசியுவிலிருந்து சிறப்பு வார்டில் கருணாநிதி

கடும் முதுகவலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 26ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் தீர்மானித்தனர். அதன்படி டெல்லி எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் தலைமையிலான டாக்டர்கள் குழு கடந்த புதன்கிழமை அறுவைச் சிகிச்சை செய்தது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் டிவியில் செய்திகளைப் பார்ப்பதாகவும், பத்திரிகைககளைப் படிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படட்டுள்ளதால் இன்று காலை அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
முதல்வரின் உடல் நிலை குறித்து அடுத்த வாரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் முடிவெடுப்பார்கள்.
17ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:
இந் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தான் சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications