2 மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்!
திருச்சி: தேமுதிகவைச் சேர்ந்த பெரம்பலூர், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூண்டோடு மாற்றம் செய்துள்ளார்.
பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பான கேப்டன் மன்றத்தின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலை உருண்டவர்களில் மாவட்ட அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, வர்த்தக அணி, வழக்கறிஞர் அணி, பட்டதாரி அணி, விவசாய அணி, நெசவாளர் அணி, மீனவரணி, கலை-இலக்கிய அணி, தொண்டரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடக்கம்.
இந்த அதிரடியாக மாற்றம் அந்தக் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று நமது மாவட்டத்திலும் மாற்றம் வருமா என்று எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த அக் கட்சி நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications