போர் நிறுத்தத்தை வலியுறுத்த இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்பும் பிரிட்டன்
லண்டன்: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும், அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசை வற்புறுத்தவும் சிறப்புத் தூதரை இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நியமித்துள்ளார்.
இலங்கைக்கான சிறப்புத் தூதராக டெஸ் பிரவுனை, கார்டன் பிரவுன் நியமித்துள்ளார். டெஸ் பிரவுன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவார்.
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அரசியல் ரீதியில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட பிரவுன் பாடுபடுவார் எனவும் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை முடுக்கி விடவும், அரசியல் தீர்வு ஏற்பட்டு, நீடித்த அமைதி நிலவவும் பிரவுன் முன்னுரிமை கொடுத்து செயல்படுவார்.
இலங்கை அரசு, இலங்கையின் அனைத்து பிரிவு தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், சர்வதேச தலைவர்களுடன் இணைந்து பிரவுன் செயல்பட்டு அமைதித் தீர்வு ஏற்பட பாடுபடுவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications