காதலர் தினம் - நாகர்கோவிலில் நாய்களுக்கு திருமணம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் இந்து மகாசபா அமைப்பினர் 2 நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, காதலர் தினத்துக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்துக்கு சிவசேனா, பாஜக, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தத்திருந்தன. கலாசார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் இது போன்ற கொண்டாட்டங்களை ஆதரிக்க கூடாது என தெரிவித்தன.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட இந்து மகாசபா அமைப்பினர் நாகர்கோவிலில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து பீச்ரோடு சந்திப்பு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு இந்து மகாசபா மாவட்ட தலைவர் நீலகண்டபிள்ளை தலைமை தாங்கினார்.

இதற்காக ஒரு ஆண் நாயையும், ஒரு பெண் நாயையும், நாய் பிடிப்பவர்கள் மூலம் பிடித்து நேற்று காலை கொண்டு வந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத நாய்களுக்கு மாலை மாற்றப்பட்டது. பின்னர் ஆண் நாய், பெண் நாய்க்கு குங்குமம் இட்டது. பெண் நாய்க்கு தாலி கட்டி நிஜ திருமணம் போன்று நிகழ்ச்சிகள் நடந்தது.

இரண்டு நாய்களையும் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்த்தினர்.

கல்யாணத்தில் இணைந்த காதல் ஜோடிகள்

ஹைதராபாத்தில் பஜ்ரங் தள அமைப்பினர் நேற்று இரண்டு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அவர்களில் விஜய் ஆனந்த் - கிருதி என்ற ஜோடி தங்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், பஜ்ரங் தளம் புண்ணியத்தால் தங்களது காதல் கல்யாணத்தில் முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.

2வது ஜோடி, நிஜாமாபாத் பூங்காவில் வைத்து பிடிபட்டது. அவர்களுக்கும் பஜ்ரங் தளத்தினர் கல்யாணம் செய்து வைத்தனர்.

மூன்றாவதாக கண்டிப்பேட்டையில் மற்றொரு ஜோடிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற போது போலீசார் களம் புகுந்து 20 பேரைக் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஒரு காலனி அறையில் இருந்த காதல் ஜோடியை வெளியே இழுத்துப்போட்டு மூலாராம் என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். புனேவில் உல்லாசப்பயணம் வந்த காதல் ஜோடிக்கு சிவ சைனிக் அமைப்பினர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

அண்ணன், தங்கைக்கு ஏற்பட்ட கொடுமை

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், விக்ரம் பல்கலைக்கழகத்துக்கு சென்ற அண்ணனுடன் சென்ற தங்கையை காதலன், காதலி என நினைத்த சிலர் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் கொடுத்த புகாரை அடுத்து 4 பஜ்ரங் தள அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

ஜபல்பூரில் பஜ்ரங் தளத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காதலர் தின எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக டெல்லியில் 600 பேரும், மும்பையில் 1000 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் காதலர் தினத்தன்று அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக, ஸ்ரீராம் சேனா இயக்கத்தின் தலைவரான பிரமோத் முத்தாலிக் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.

பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுவதும் 500க்கு மேற்பட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கண்ணகி சிலை முன் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 150 பேரை போலீசார் கைது செய்தனர். காதலர் தினத்தை எதிர்த்து சென்னை கடற்கரை சாலையில், கண்ணகி சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அனுமதி தராத இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காதலர் தினத்திற்கு சில இந்து அமைப்புகள் தெரிவித்து வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் காதலர்கள் வழக்கமான முறையில் தங்களது காதலைக் கொண்டாடினர்.

பொழுதுபோக்குப் பூங்காக்கள், தியேட்டர்கள், வர்த்தக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் அலை அலையாகக் காணப்பட்டனர்.

சிவப்பு ரோஜாக்களின் விற்பனை அமோகமாக இருந்தது. வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், கூடவே நிறைய முத்தங்களையும் காதலர்கள் பரிமாறிக் கொண்டனர்.


கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் மாலை 5 மணிக்கு மேல் காதலர்களின் வருகை அதிகமாக இருந்தது.

காதலர் தின அஸ்தி கரைப்பு

நெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர். காதலர் தின அட்டைகளை எரித்து தாமிரபரணி ஆற்றில் அஸ்தியை கரைத்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் காதலர்கள் கூடும் இடங்களை கண்காணிப்பதற்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

நெல்லையில் பாஜக, மற்றும் இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடத்தினர்.

காதலர் தின போஸ்டர்களை ஒட்டி அதற்கு செருப்பு மாலை போட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் காதலர் தின அட்டைகளை எரித்து அந்த சாம்பலுடன் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு மலர் தூவி அஸ்தி கரைப்பது போல் சாம்பலை கரைத்தனர். இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல் தூத்துக்குடி சிவன் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். பின்னர் காதலர் தின அட்டைகளையும் தீயிட்டு எரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+