பெற்ற குழந்தையை கூவி விற்ற தாய்!
விழுப்புரம்: வறுமையின் காரணமாக, பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை கடைவீதியில் பெற்ற தாயே விற்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கடமங்கலம் அருகே உள்ளது துலுக்காநத்தம் காலனி. இந்த காலனியைச் சேர்ந்தவர் வி்ஸ்வநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனையில் லலிதாவுக்கு நான்காவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பெண் குழந்தை பிறந்தது பற்றி கணவருக்கு தெரியவந்தால் அவர் திட்டுவார் என்று அச்சம் கொண்ட லலிதா அந்த குழந்தையை விற்க முடிவு செய்து, அந்த பச்சிளம் குழந்தையுடன் கடலூருக்கு வந்தார்.
கடலூர் டவுன்ஹால் எதிரே பாரதிசாலையில் சென்றவர்களிடம் குழந்தை வேண்டுமா குழந்தை வேண்டுமா என்று கூவி கூவி சத்தமிட்டார்.
அதிர்ச்சி அடைந்த சிலர் அவரிடம் என்ன ஏது என்று கேட்டபோது, ரூ 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் குழந்தையை தருவதாக கூறினார். இத் தகவல் ஊருக்குள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, பெற்ற குழந்தையை விற்பனை செய்ய முயன்ற லலிதாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு லலிதாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தீவிர விசாரணை நடத்தினார்.
அப்போது, தாங்கள் ஏற்கனவே வறுமையால் வாடி வருவதாகவும், இந்த நிலையில் தங்களுக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதை வளர்க்க முடியாததால் விற்க முயன்றதாக கூறினார்.
இதையடுத்து லலிதாவும், அவரது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.
அப்போது, இந்த குழந்தையை வளர்க்க கூடிய சூழ்நிலை தங்களுக்கு இல்லை இதனால் இந்த குழந்தையயை எடுத்து வளர்க்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரியிடம் லலிதா கெஞ்சினார்.
இதனால் லலிதாவுக்கு பிறந்த அந்த 4-வது குழந்தையை அரசு தொட்டில் அதிகாரிகள் சேர்த்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications