குட்டையில் விழுந்து குட்டி யானை பலி
கோவை: சத்தியமங்கலம் அருகே வனவியல் பூங்காவில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை ஒன்று எதிர்பாராவிதமாக மரணமடைந்தது. தாய் யானை சோகத்துடன் நின்று பிளிறிய காட்சி பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கியது.
சத்தியமங்கலத்துக்கு அருகில் பண்ணாரி செல்லும் வழியில் கூயனூர் பிரிவு என்னும் இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனவியல் பூங்கா ஒன்று உள்ளது.
இங்கு யானைகள் தண்ணீர் குடிக்க வசதியாக குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குட்டைக்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் வன அதிகாரி எம்.எஸ்.மணிக்கு குட்டைக்கு அருகில் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகில் மற்ற யானைகள் சோகமாக நின்று கொண்டிருந்தன.
கொஞ்ச நேரத்தில் மற்ற யானைகள் சென்றுவிட்டன. ஆனால், தாய் யானை மட்டும் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. பல மணி நேரம் கழித்த பின்னரே அது காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அங்கு கால்நடை டாக்டர்களுடன் சென்ற வனத்துறையினர் குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அதை புதைத்தனர்.
இதுகுறித்து வன அதிகாரி எம்.எஸ்.மணி கூறுகையில், இறந்தது ஒரு ஆண் யானை. அது பிறந்து மூன்று அல்லது நான்கு நாள் தான் ஆகியுள்ளது. தண்ணீர் குடிக்க வரும்போது எதிர்பாராவிதமாக இந்த குட்டியானை இறந்துள்ளது என்றார் வன அதிகாரி.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications