தப்பி வரும் தமிழர்கள் மீது மீண்டும் குண்டு வீச்சு -50 தமிழர்கள் பலி
வன்னி: இன்று அதிகாலை 108 தமிழர்களை கொடூரமாகக் கொன்ற இலங்கை படையினர் இன்று பிற்பகல் நடத்திய இனனொரு வெறித்தனமான தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரணைப்பாளை பகுதியில் உள்ள அனந்தாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து சென்ற தமிழர்களைக் குறி வைத்து நான்கு விமானப்படை விமானங்கள் கிளஸ்டர் எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசி இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் தாக்கியுள்ளன.
இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 70 பேர் மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பத்து பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் காயமடைந்து கிடக்கின்றனர் பல தமிழர்கள். அவர்களை உடனடியாக திரிகோணமலை அல்லது பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு தவிர்க்க முடியாதுத என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வன்னிப் பகுதியில் எந்தவிதமான மருந்துகளும் இல்லை. காரணம், இலங்கை அரசு மருந்து சப்ளையை இப்பகுதியில் நிறுத்தி 2 மாதங்களாகிறது. இதனால் காயமுற்ற பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த பத்து மணி நேரத்தில் முல்லைத்தீவில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக மாத்தளன் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications