'ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'- கருணாநிதி

இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:
2009-10ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நேற்றைய தினம் நிதி அமைச்சர் அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வணிகர்களும் பொதுமக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் நிதி நிலை அறிக்கை படிக்கப்பட்டபோது சட்டமன்றத்தையே புறக்கணித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் அதற்கான காரணத்தை விளக்கி ஒரு அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்.
அந்த அறிக்கையில் "மைனாரிட்டி திமுக அரசால்'' என்று மூன்றாண்டு காலமாக தொடர்ந்து பாடி வரும் பல்லவியையே இதிலும் பாடியிருக்கிறார்கள். மூன்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அரசை, அதிமுக இவ்வாறு மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்லுகின்ற வரையில் கழகத்தின் சார்பில் அதிமுகவைப் பற்றி குறிப்பிடும் போது ''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' என்றே சொல்லலாம்.
''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' சார்பில் தரப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பாக இலங்கை ராணுவத்தால் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், போர் நிறுத்தம் ஏற்பட எந்த விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' தலைவி ஜெயலலிதா கடந்த மாதம் 17ம் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்'' என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசியது, அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு சரியல்ல என்று அவர்கள் அணியிலே உள்ள தோழர் தா.பாண்டியனே மறுநாள் அறிக்கை விடுத்தார்.
இப்படியெல்லாம் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதாவின் கட்சியினர் தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரமாண்டமான மனிதச் சங்கிலியை நடத்தி, சட்டமன்றத்திலே 3 முறை தீர்மானம் தீட்டி, டெல்லி சென்று அனைத்துக் கட்சியினரும் பிரதமரைச் சந்தித்து போரை நிறுத்த கோரிக்கை வைத்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பச் செய்ய, இலங்கை அரசையே 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்யச் செய்து,
இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரண நிதி திரட்டி, அந்த நிதியிலிருந்து உணவுப் பண்டங்களையும், உடைகளையும், மருந்துகளையும் வாங்கி செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கைக்கு அனுப்பி, அவை அங்கே முறையாக அவர்களுக்குக் கிடைக்கச் செய்து, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றதொரு அமைப்பையும், நீதியரசர்களைக் கொண்ட அதன் துணை அமைப்பையும் ஏற்படுத்தி இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நாம் நாடகம் நடத்துகிறோமாம்.
அம்மையார் 3 மாத காலமாக ஓய்வெடுத்து விட்டு, அரசு சார்பிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளிலே மட்டுமல்லாமல், அவர்களுடைய அணியிலே இருக்கின்ற கட்சியினர் நடத்திய உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளிலே கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, இன்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தன்னை கைவிட்டு விடுவார்களோ என்பதற்காக திடீரென்று போர் நிறுத்தம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்காமல் நாடகமாடுவதாக அறிக்கை விடுத்து விட்டு நிதிநிலை அறிக்கையை புறக்கணிக்கச் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியிலே ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் என்று சிரிப்பாய் சிரித்த நிலை மறந்து போய், தற்போது எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்று அறிக்கையிலே கூறியிருக்கிறார்கள்.
ஒருவேளை அந்த அறிக்கையைத் தயாரித்தவர் கிண்டலாக "ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக இப்போது அறிக்கை என்ற பெயரால் தலை விரித்து ஆடுகிறது'' என்று எழுதியிருக்கிறாரோ என்னவோ?.
மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கழக அரசின் சாதனைகளை அன்றாடம் அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டனவா என்பதை தெளிவாக அறிவார்கள்.
ஒரேயொரு உதாரணம் மட்டும் கூற வேண்டும யானால் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வழங்கி வருகிறோம். நாட்டு மக்களுக்கு இது தெரியாதா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க












Click it and Unblock the Notifications