மகராஷ்டிராவில் காங்கிரசே வெல்லும்-கருத்து கணிப்பு
டெல்லி: ஆந்திராவை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுவங்கி உயர்ந்திருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜக, சிவசேனா கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் இங்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் மூன்றாவது பகுதி நேற்று வெளியானது.
அதில் ஆளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு 5 சதவீதம் உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 45 சதவீதம் ஓட்டுப்பெற்ற இந்த கூட்டணி இம்முறை பாதிக்கு பாதி (சுமார் 50 சதவீதம்) ஓட்டுக்களை கைப்பற்றும் எனத் தெரிகிறது.
அதேசமயம் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு 39 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்துகணிப்பு கூறுகிறது. இது கடந்த தேர்தலை விட 4 சதவீதம் குறைவாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்காளர்கள் எண்ணிக்கையும் 1 சதவீதம் வரை குறைந்து 2 சதவீதமாகியுள்ளது.
இதையடுத்து இங்குள்ள 48 தொகுதிகளில் பெருவாரியானவற்றை காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை தாக்குத்ல சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக, சிவசேனா கூட்டணியில் அதிக வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் காரணமாக
உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்விக்கு பலரும் தங்களுக்கு காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை என கூறியுள்ளனர். பாஜக கூட்டணியின் உள்விவகாரம் காங்கிரசுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. புதிய முதல்வர் அசோக் சவான் மீது எந்த புகார்களும் வராதது காங்கிரசின் பலத்தை கூட்டியுள்ளது.
சமீபகாலமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டனர். இவ்விவகாரம் காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மராத்தியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கு விவகாரத்தில் விவேகமாக முடிவுக்கு கிடைத்த வெற்றி விவசாயிகள் பிரச்சினையை மறக்க செய்துவிட்டன.
அதேசமயத்தில் தலித், மராத்தியர்கள் மற்றும் உயர் ஜாதியினர் என அனைவரது மத்தியிலும் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மகராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பிரதமர் பதவிக்கு சரத் பவாரை ஆதரிக்க தாங்கள் தயார் என கூறியிருக்கிறார். இது பாஜகவில் இருக்கும் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் குழப்பத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா விவகாரம், நகர்புறத்தில் இருக்கும் பாஜக கூட்டணி செல்வாக்கை சிதறிடித்துவிடும் என்றும் இந்த ஓட்டுக்கள் காங்கிரசுக்கு கைகொடுக்கும் என்றும் கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு











Click it and Unblock the Notifications