சுவாமியை கைது செய்யக் கோரி வக்கீல்கள் ரகளை- ஹைகோர்ட் காவல் நிலையம் எரிப்பு-நீதிபதி காயம்

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்கள் சிலர் அவரை தாக்கி அழுகிய முட்டைகள், தக்காளிகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தனது தலைமையி்ல் ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்துவார்கள் என தற்காலிக தலைமை நீதிபதி முகாபாத்யாயா இன்று அறிவித்தார்.
இந் நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெருமளவில் திரண்டனர். சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. அத்தோடு நிற்காமல், போலீஸாரை கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர்.
வக்கீல்களின் செயலால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மகா பொறுமையாக இருந்தனர்.
இந்த நிலையில் வக்கீல்களின் செயல் சற்று எல்லை மீறியது. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினர்.
மேலும், காவல் நிலையத்திற்கு சிலர் தீ வைத்ததால் பதட்டம் ஏற்பட்டது. வெளியில் இருந்த ஒரு போலீஸ் பைக்கும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து போலீஸார் வெகுண்டெழுந்து தடியடியில் இறங்கினர். கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சரமாரியாக தடிகளால் அடித்து விரட்டினர்.
இதனால் மேலும் கோபமடைந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி சேதப்படுத்தினர். பல மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
நீதிபதி காயம்:
இந்த பயங்கர ரகளையைத் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் அங்கு வந்தார். அவருடன் ஏராளமான வக்கீல்களும் வந்தனர். அப்போது அவர்களை நோக்கியும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் நீதிபதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. பெரும் வன்முறை மூண்டதால் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த பலரும் அலறி அடித்து ஓடினர்.
இந்த மோதலில் பத்திரிக்கையாளர்களும் தப்பவில்லை. சில டிவி கேமராமேன்களும் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அமளி துமளி நீடித்தது.
டிஜிபி, கமிஷனர் விரைந்தனர்:
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் டிஜிபி ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அதிரடிப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
துணை ஆணையர் உள்பட 20 போலீஸார் காயம்:
இந்த வன்முறையில் துணை ஆணையர் சாரங்கன் உள்பட 20 போலீஸார் காயமடைந்திருப்பதாக காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில வக்கீல்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கி மண்டை உடைந்ததாக வக்கீல்கள் தரப்பில் கூறப்பட்டது.
நீதிமன்ற கேட்டை மூடிய மதுரை வக்கீல்கள்:
சென்னையில் நடந்த தடியடி, மோதல் சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும் மதுரை உயர்நீதி்மன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உயர்நீதிமன்றக் கிளை வாசல் கேட்டை இழுத்து மூடி அங்கு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குதித்தனர். இதனால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே இன்று மாலை மூண்ட இந்த பெரும் ரகளையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சுவாமி மீது தாக்குதல்-பாராட்டி போஸ்டர்கள்:
இதற்கிடையே சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டதை பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சுப்பிரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல 'சிறப்பு செய்யுங்கள்' என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications