நடந்தது 'விமான தற்கொலைத் தாக்குதல்'-புலிகள்

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் (புலிகளின் தற்கொலைப் படையினர்) வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இதனால் இந்தத் தளங்கள் மீது புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. விமானப் படைத் தளத்தில் மீது எங்களது விமானங்களைப் பாயச் செய்து தாக்குதல் நடத்தினோம்.
இந்தத் தாக்குதலை வெற்றிகரமான நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான கர்னல் ரூபன், லெப்டினென்ட் கர்னல் சிரித்திரன் ஆகியோர்களின் திறமையான வீரச் செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் அனைத்துப் பகுதிகளும் பிடிபட்டுவிட்டன, விமானங்களை அவர்களே எரித்துவிட்டனர்... இதோ புகைப்படங்கள், அவர்களது ரன்வேக்களையும் பிடித்துவிட்டோம் என்று தினமும் ஒரு கோயபல்ஸ் ரக தகவல்களை தந்து வரும் இலங்கை பாதுகாப்புத்துறையையும் மேலும் பல நாடுகளையும் புலிகளின் இந்த விமானத் தாக்குதல் பெரும் அதி்ர்ச்சியைத் தந்துள்ளது.
இவர்களது எங்கிருந்து இந்த விமானங்களை இயக்குகின்றனர், எங்கு இவற்றை மறைத்த வைக்கின்றனர், புலிகள் எப்படி விமானப் படை பயிற்சி பெற்றனர் என்பது இன்னும் பெரும் ரகசியமாகவே உள்ளது.
புலிகளின் இந்தத் தாக்குதலைப் பார்த்தால் எதி்ர்வரும் காலங்களில் இலங்கை ராணுவத்துக்கு மேலும் அதிர்ச்சிகள் காத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications