மின் நிலைய விழா-தூத்துக்குடி வருகிறார் பிரணாப்
தூத்துக்குடி: இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடு பிடித்த பின்னர், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த பின்னர் முதல் முறையாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகிறார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம் அருகே புதிதாக தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்கள் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு மின்வாரியமும் கூட்டாக முடிவு செய்தன.
இந்த கூட்டு நிறுவனத்துக்கு என்.எல்.சி- தமிழ்நாடு பவர் லிமிடெட்' என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 75 சதம் தமிழகத்தின் தேவைக்கும், 25 சதம் மற்ற தென்மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.
இந்த நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை ஒரிசா மாநிலத்தில் உள்ள டால்ச்சர் சுரங்கத்தில் இருந்து கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு சொந்தமான 108 எக்டர் நிலப்பரப்பில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 28-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.
இந்த விழாவுக்கு மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் பக்ருடியா தலைமை தாங்குகிறார். மத்திய வெளியுரவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார்.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த பின்னர் பிரணாப் தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் கொழும்பு சென்றபோது கூட அவர் சென்னைக்கு வராமல் அப்படியே டெல்லி போய் விட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடிக்கு பிரணாப் முகர்ஜி வருகிறார். தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பெருமளவில் போராட்டங்கள் நடந்து வருவதால் அவரது நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தனது தமிழக வருகையின்போது சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications