இனி வாங்குவது கஷ்டம்; தங்கத்தை விற்க விரும்பும் மக்கள்!

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.11,500 கடந்து ரூ.12 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதனால் விற்பனை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் மாதத்துக்குப் பிறகு விலை குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதுவும் உறுதி என்று கூறிவிட முடியாத நிலை.
இதனால் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று காசாக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள். இப்போது விற்றுவிட்டு மீண்டும் விலை குறையும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, பழைய நகைகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் நகைக் கடைகளை நோக்கி நடந்த வண்ணம் உள்ளனர்.
இன்னொன்று வங்கிகளில் கடன் வாங்கும் சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளதால், இனி இருக்கும் நகைகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, கடனில்லாத வாழ்க்கைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
"பழைய நகைகளை எந்த நிலையில் இருந்தாலும், சந்தை விலையைவிட 1 சதவீதம் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். கடந்த 10 நாட்களாக, தங்கத்தை விற்பதற்காக வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விலை தொடர்ந்து அதிகரித்தால் இது மேலும் அதிகரிக்கும்" என பிரபல நகைக்கடை ஜுக்ராஜ் காந்திலால் நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்குச் சந்தை சரிவால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில் தங்கத்துக்கான தேவை 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications