ஜெ. பிறந்த நாள்-செருப்பு அணிவித்த அதிமுகவினர்!
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் ரோட்டில் நடந்து சென்ற ஏழை-எளிய மக்களுக்கு அதிமுகவினர் செருப்புகளை அணிவித்தனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கரூர் எஸ்.நகாரஜன் தலைமையில் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, யாகம், மற்றும் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் முகில் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசிய பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள்- போலீசார் மோதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்பு, கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கரூர் எஸ்.நாகராஜன் தலைமையில் இளைஞர்கள் சிலர் ஆட்டோவில் நகரை வலம் வந்தனர்.
அப்போது நகரில் ரோட்டில் செறுப்பு இன்றி வண்டி இழுக்கும் ஏழை எளியவர்கள், டீ கடை ஊழியர்கள், ரிக்க்ஷா தொழிலாளர்கள், செருப்பு இன்றி பள்ளி சென்ற குழந்தைகளுக்கு அவர்கள் காலுக்கு ஏற்ற சைஸ் செருப்புகளை வாங்கி அணிவித்து வித்தியாசமாக பிறந்த நாளை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications