இலங்கைக்கு போதை பொருள் கடத்திய வாலிபர் கைது
சென்னை: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ரூ 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை கடத்த முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (38). இவர் கொழும்பு செல்லும் ஏர்லங்கா விமானத்தில் பயணம் செய்ய நள்ளிரவில் சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது பையில் 5 கிலோ எடையுள்ள பான்பராக் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சாதிக்பாஷாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பான்பராக் பாக்கெட்டுகளை இலங்கைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பான்பராக் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதில் பான்பராக் மற்றும் ஹான்சுக்கு பதிலாக கேட்டமைன் என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு சாதிக்பாஷாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதிக் பாட்ஷாவிடம் கைப்பற்றப்பட்ட கேட்டமைன் என்ற போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications