பாகி்ஸ்தானி்ல் கடத்தப்பட்ட ஐநா அதிகாரி கொலை?
குவெட்டா: சமீபத்தில் கடத்தி செல்லப்பட்ட ஐநா அகதிகள் அமைப்பு அதிகாரி ஜான் சோலக்கியை கொலை செய்துவிட்டதாக மர்ம தொலைபேசி தகவல் ஒன்று வந்துள்ளது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக் கடத்தி சென்ற தீவிரவாதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவாட்டாவில் இருந்த ஐநா தூதரக அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் ஜான் சோலக்கி. கடந்த 2ம் தேதி தனது காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்து போது, தீவிரவாதிகள் இவரது காரை வழிமறித்தனர். டிரைவரை கொன்றுவிட்டு அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இச்சம்பவத்துக்கு பலுசிஸ்தான் ஐக்கிய விடுதலை அமைப்பு பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்தது.
இந்நிலையில் குவட்டா பத்திரிகையாளர்கள் கிளப்பிற்கு போன் செய்த மர்ம ஆசாமி ஒருவர் தாங்கள் சோலக்கியை கொலை செய்துவிட்டதாகவும், அவரது உடல் இன்னும் இரண்டு மணி நேரத்தில் எதாவது ஒரு இடத்தில் கிடக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த எக்ஸ்பிரஸ் நியூஸ் என்ற டிவி ஒளிபரப்பிய செய்தியில், போன் செய்த மர்ம நபர் குவட்டாவுக்கு தென்மேற்கே 100 கி.மீ., தொலைவில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள நுஸ்கி என்ற நகரில் இருந்து பேசியுள்ளார் என்கிறது.
உயிரோடு இருக்கிறார்
இந்நிலையில் பலுசிஸ்தான் ஐக்கிய விடுதலை அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில், சோலக்கி கொலை செய்யப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அவருக்கு இதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளது. ஐநா அமைப்பு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வதந்தி உண்மையாகிவிடும் என்றார்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications