தூத்துக்குடி துறைமுக பணிகளுக்கு ரூ.312 கோடி
டெல்லி: தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி பணிக்கு மத்திய அமைச்சரவை ரூ 312 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் சரக்கு போக்குவரத்துக்கு உதவும் வகையில் மேலும் ஒரு கன்டெய்னர் தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.
வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்களின் பொருளாதார விவகார குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தின் போது பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆராயப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி பணிக்கு பொருளாதார விவகார குழு ரூ 312 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தில் தூத்துக்குடியில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க 8வது கன்டெய்னர் தளம் அமைக்கப்படும்.
இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட்டு அவை 21 மாதங்களில் முடிவடையும். புதிய தளம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆண்டுக்கு கூடுதலாக 6 லட்சம் கன்டெய்னர்களை இயக்க முடியும்.
ஏழாவது தளம் தனது அதிகபட்ச திறனான 4.7 கன்டெய்னர்களை முழுவீச்சில் இயக்கி வருகிறது. 8வது தளத்துக்கான வேலை முடிந்தவுடன் நேரமும், செலவும் மிச்சப்படும். வேலைகள் துரிதமாக நடக்கும்.
இதன்மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படும் என்றார் சிதம்பரம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications