உயர்நீதிமன்றம்- வளாக கோர்ட்கள் தவிர மற்ற கோர்ட்கள் நாளை முதல் இயங்கும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிற கோர்ட்களைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்களும் நாளை முதல் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் கோர்ட்டுகளும், சென்னையில் மூன்று இடங்களில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளும், சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே அமைந்துள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் 25-ம் தேதிமுதல் செயல்படும். ஐகோர்ட்டு
சம்பவம் காரணமாக கீழ்கோர்ட்டுகள் மூடப்பட்டிருந்த வேலை நாட்கள், இனிவரும் நாட்களில் சரிசெய்யப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
கோர்ட்டு வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். கோர்ட்டு ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் கோர்ட்டுக்கு வளாகத்திற்கு வெளியே சற்று தூரத்தில் போலீசார் நிறுத்தப்பட வேண்டும்.
ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 19-ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு கீழ் கோர்ட்டுகளில் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோர்ட்டு வளாகத்திற்கு உள்ளே ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்திருந்தால் அதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை இனிவரும் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், அதன் வளாகத்தில் உள்ள பிற கோர்ட்கள், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவற்றின் திறப்பு குறித்து நீதிபதிகள் இன்று முடிவு செய்வார்கள்.
போலீஸ் சார்பில் வாதாட தடை:
இதற்கிடையே, மதுரையில் போலீஸ் சார்பில் நீதி மன்றத்தில் யாரும் ஆஜராவதில்லை என்று உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷினர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மதுரையில் வக்கீல்களை துப்பாக்கியைக் காட்டி விரட்டிய டிஐஜி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் நீதி மன்ற கிளையில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளில், அந்த அதிகாரிகள் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பார் அசோசியேஷன் செயலாளர் மகேந்திரன், பெண் வக்கீல் சங்க தலைவர் நிஷா பானு, மதுரை வக்கீல் சங்க செயலாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications